தருமபுரி தொப்பூர் சாலை விபத்து: துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்
தருமபுரி தொப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.


தருமபுரி தொப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டை சுமை ஏற்றிய லாரி ஒன்று சனிக்கிழமை பிற்பகல் தருமபுரியைக் கடந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த லாரியின் பிரேக் பழுதானது.
ஏற்கெனவே தொப்பூர் அருகே நடந்திருந்த சிறு விபத்து காரணமாக அந்த வழியில் போக்குவரத்து தேக்கமடைந்து வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், பிரேக் பழுதான லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள், சிறிய சரக்கு வாகனம் என சுமார் 10 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்களில் பயணித்தவர்களில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தருமபுரி விபத்து குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தருமபுரி தொப்பூர் சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...