

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் தாததேசிகன் சாற்றுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை உற்சவர் தேவராஜப் பெருமாள் ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அத்திவரதருக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை தாததேசிகன் சாற்றுமுறை திருநாள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தாததேசிகன் சாற்றுமுறை உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் உற்சவர் தேவராஜப் பெருமாள் திருக்கோயிலின் திருமலையிலிருந்து பெருந்தேவித் தாயார் சந்திதிக்கு எழுந்தருளினார். அங்கு உற்சவர் தேவராஜ சுவாமிக்கும், பெருந்தேவித் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.
இதனைத் தொடர்ந்து தாததேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி மரியாதை செய்விக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனையடுத்து லெட்சுமி, சரஸ்வதி தேவியரோடு உற்சவர் தேவராஜப் பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் ரத்ன அங்கி அணிந்து தனித்தனியாக கேடயத்தில் எழுந்தருளி திருக்கோயில் வளாகத்திற்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் உற்சவர் தேவராஜசுவாமி திருமலைக்கும், பெருந்தேவித் தாயார் அவரது சந்நிதிக்கும் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.