ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சட்டத்திற்கு உட்பட்டு பிரசாரம் தொடரும்: கமல் ஹாசன்

சட்டத்திற்கு உட்பட்டு எங்கள் பிரசாரம் தொடரும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

News image
கமல்ஹாசன்
Updated On :13 டிசம்பர் 2020, 10:31 am

DIN

தேர்தல் பிரசாரத்தில் சட்டம், விதிமுறைகளுக்கு உள்பட்டே செயல்படுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற நோக்கத்தின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தனது முதல்கட்ட பிரசாரத்தை மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் டிசம்பர் 16 வரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

அதற்காக சென்னையிலிருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

எங்களுக்கு சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டாலும் சட்டத்திற்கு உள்பட்டு நாங்கள் எப்படியெல்லாம் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தோமோ அதன்படியே எங்களது பயணம் தொடரும். சில இடங்களில் எங்களுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எங்களுக்கு தடைகள் புதிதல்ல. அரசியலுக்கு வருவதற்கு முன்பே தடை விதித்தார்கள். ஏற்கனவே அந்த அனுபவம் உள்ளது. ஒத்திகையும் பார்த்துவிட்டோம் என்பதனால் பதற்றம் இல்லை.

Story image

மக்களைச்  சென்றடைய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. சட்டத்திற்கு உள்பட்டு, விதிமுறைகளுக்கு உள்பட்டுத்தான் செயல்பட இருக்கிறோம். இதனை மீறும் எண்ணம் எக்களுக்கு இல்லை. எங்கள் பிரச்சாரம் யாருக்கு பிரச்னையாக இருக்கிறதோ அவர்கள் எங்களுக்கு தடை செய்வார்கள். அதையும் மீறித்தான் இந்த பிரசாரம் நடக்கும். தேர்தலின்போது அணிகள் பிளவுபடும், அணிகள் கூடும், இப்போதைக்கு இவ்வளவுதான் கூறமுடியும். மூன்றாவது அணி எப்போது சாத்தியம் என்பதை இப்போது சொல்ல  முடியாது என்றார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் மக்கள் நீதிமைய கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.