தில்லி: கரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது

தில்லியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தில்லி: கரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது (கோப்புப்படம்)
தில்லி: கரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது (கோப்புப்படம்)
Updated on
1 min read

தில்லியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அந்தவகையில் தில்லியில் மூன்றாவது முறையாக கரோனா பரவல் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1984 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.07 லட்சமாக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு   

கரோனாவால் பாதிக்கப்பட்டு புதிதாக 33 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 10,014-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.74 சதவிகிதமாக உள்ளது. கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி 4.96 சதவிகிதமாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com