காவலர் எழுத்துத் தேர்வு தொடங்கியது: 5.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காலியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று தேர்வு நடைபெற்று வருகிறது. மாவட்ட, மாநகர ஆயுதப்படை, சிறைத்துறை, தீயணைப்புப் படை உள்ளிட்ட பிரிவுகளில் காவலர்கள் நிரப்பப்பட உளளனர்.
இதற்காக தமிழகம் முழுவதும் 499 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 5.50 லட்சத்துக்கு அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 35 மையங்களில் 29,981 பேர் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 11 மணி முதல் மதியம் 12.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சீருடை பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...