திருப்பூர் மாநகராட்சியைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகராட்சியைக் கண்டித்து திமுக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர் மாநகராட்சியைக் கண்டித்து திமுக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள குளத்துப்புதூர் பகுதியில் திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், கிழக்கு மாவட்டப்பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற திமுகவினர் கூறியதாவது:
திருப்பூர் மங்கலம் சாலையில் ஆண்டிபாளையம் முதல் சின்னாண்டிபாளையம் பிரிவு வரையில் உள்ள 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மாநகராட்சி சார்பில் குழாய் பதிக்கும் பணிக்காகச் சாலை தோண்டப்பட்டது.
ஆனால் இதன் பிறகு தார்ச் சாலை அமைக்காததால் சாலைகள் அனைத்தும் இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் நாள்தோறும் சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அதே போல், மாநகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய், பாதாளச் சாக்கடை திட்டத்துக்காகச் சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆகவே, மாநகரில் தோண்டப்பட்டுள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக வடக்கு மாவட்டப்பொறுப்பாளர் இல.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...