திருச்சியிலிருந்து தில்லி செல்லும் விவசாயிகள் தற்கொலைப் படை
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியிலிருந்து விவசாயிகளின் தற்கொலைப் படையைத் தயார் செய்து புதுதில்லி செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியிலிருந்து விவசாயிகளின் தற்கொலைப் படையைத் தயார் செய்து புதுதில்லி செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், பொதுச் செயலாளர் பழனிவேல், மாநில துணைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கிட்டப்பா ரெட்டி, முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறியது:
விவசாயிகளை அழித்து, வேளாண்மைத் தொழிலைப் பெருநிறுவனங்களின் வசம் ஒப்படைக்கும் புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 30 பேர் அடங்கிய தற்கொலைப் படை தயார் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 2 முறை தில்லி செல்ல முயன்ற எங்களைத் தடை செய்து கவால்துறையினர் கைது செய்தனர். எனவே, இந்த முறை தில்லி செல்வதற்காக நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் எங்களது விவசாயிகள் தற்கொலைப் படையுடன் தில்லி சென்று தினம் ஒருவர் என்ற வகையில் தற்கொலை செய்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராடுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...