அண்ணா பல்கலை.யில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை: சுகாதாரத்துறை

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
Updated on
1 min read

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) 250 மாணவர்களுக்கு பரிசோதனை செய்த நிலையில், யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த சென்னை ஐஐடி, கடந்த 1-ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், அங்கு பணியாளர்கள் மாணவர்கள் என 191 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 மாணவர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்பட நேற்று (புதன்கிழமை) 250 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் மூன்று 3 வளாகத்திலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com