இந்நிலையில், மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பகலில் லேசான தூறல் இருந்தாலும், இரவில் மீண்டும் பெய்தது. இதேபோல, வியாழக்கிழமை அதிகாலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. இதனால், ஏற்கெனவே சாய்ந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதேபோல, தண்ணீரில் கொட்டிய நெற் கதிர்களும் ஈரப்பதத்தால் முளைத்துள்ளன. எனவே, இப்பயிர்களை இனிமேல் காப்பாற்ற முடியாது என்கின்றனர் விவசாயிகள். இந்த நிலைமை தஞ்சாவூர் அருகேயுள்ள உளூர், துறையுண்டார்கோட்டை, சடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது.