காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து வேளாண் அலுவலர் பலியான விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து வேளாண் அலுவலர் பலியான விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து வேளாண் அலுவலர் பலியான விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் மாற்றுத் திறனாளி சரண்யா. அலுவகத்தில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்தி வந்திருக்கிறார். 
இவர், கடந்த 5ஆம் தேதி இயற்கை உபாதை காரணமாக அருகில் வசிக்கும் வீட்டிற்கு சென்றபோது கழிவறை வெளியே அமைக்கப்பட்டிருந்த 8 அடி செப்டிக் டேங்க்கில் விழுந்து பலியானார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து வேளாண் அலுவலர் பலியான விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
இதுதொடர்பாக தலைமைச்செயலர் விரிவான அறிக்கையை 6 வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com