தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு இன்று (சனிக்கிழமை) கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் புதிதாக 341 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 60-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் புதிதாக 1,134 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,04,650-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 9,781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 1,170 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 7,82,915-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 12 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,954-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 341 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,21,587-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,037 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,14,612-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 3 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,938-ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக 115 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொய்ப் பிரசாரத்தால் இடது முன்னணியை வீழ்த்த முடியாது! பினராயி விஜயன்

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் டோக்கன் விநியோகம்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


