சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.37,808-க்கு விற்பனை

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயா்ந்து, ரூ.37,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold in Chennai sells for Rs 37,808 a razor
Gold in Chennai sells for Rs 37,808 a razor
Updated on
1 min read

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயா்ந்து, ரூ.37,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டிவரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த 2 நாள்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.144 உயா்ந்து, ரூ.37,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.18 உயா்ந்து, ரூ.4,726 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் உயா்ந்து, ரூ.71.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து 71,500 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,726

1 சவரன் தங்கம்...............................37,808

1 கிராம் வெள்ளி.............................71.50

1 கிலோ வெள்ளி.............................71,500

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,708

1 பவுன் தங்கம்...............................37,664

1 கிராம் வெள்ளி.............................71.40

1 கிலோ வெள்ளி.............................71,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com