திருவள்ளூர் பேபி கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும்: நீர் மேலாண்மை இயக்குநர்
திருவள்ளூர் அருகே பேபி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வள மேலாண்மைத்துறை இயக்குநர் சத்தியகோபால் தெரிவித்தார்.


திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாய் வழியாக நீர் வெளியேற்றும் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இக்கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீர்வள மேலாண்மைத்துறை இயக்குநர் சத்தியகோபால் தெரிவித்தார்.
திருவள்ளூர் அருகே பூண்டி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர்தேக்கத்திலிருந்து இணைப்பு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல், பேபி கால்வாய் மூலம் சோழவரம் ஏரிக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏரிியில் நீர்மட்டம் 17 அடிக்கு குறையும்போது நீரை வெளியேற்றும் கால்வாயாக பேபி கால்வாய் அமைந்துள்ளது. எனவே இந்த கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு அதிகளவில் நீரை வேளியேற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பூண்டி பேபி கால்வாய் நீரேற்று நிலையத்திலிருந்து வெளியேறும் கால்வாய் பகுதியில் நீர்வள மேலாண்மைத்துறை இயக்குநர் சத்தியகோபால், ஆட்சியர் பா. பொன்னையா ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நீர் விரைந்து செல்லும் வகையில் கால்வாய் மராமத்து பணிகளையும், அதைத் தொடர்ந்து மோகூரில் இருந்து நீர் குழாய் வழியாக செல்வதையும் நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் இது குறித்து நீர்வள மேலாண்மைத்துறை இயக்குநர் சத்தியகோபால் கூறுகையில், சென்னை பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. இந்த ஏரியில் இருந்து நீர் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல், சோழவரம் ஏரிக்கு பேபி கால்வாய் மூலம் கொண்டு செல்ல முடியும். இந்த ஏரியின் உயரமான 35 அடியில் இருந்து 17 அடியாக குறையும் போது, இங்கிருந்து இணைப்புக் கால்வாய் மூலம் எடுக்க முடியாத நிலையில் பேபி கால்வாய் மூலம் சோழவரம் ஏரிக்கும், அதையடுத்து கீழ் வரத்து கால்வாய் வழியாக புழல் ஏரிக்கும் நீர் சென்றடையும் வகையில் கடந்த 1976ல் பேபி கால்வாய் அமைக்கப்பட்டது .
எனவே இக்கால்வாயை மேம்படுத்தி அதிகளவில் தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலையில் கால்வாயில் 20 முதல் 40 கன அடி வரையில் சிறிது தூரம் கால்வாய் வழியாகவும், அதையடுத்து குழாய் பதித்து கொண்டு செல்லப்படுகிறது. அதனால் பேபி கால்வாயின் நீர் வெளியேற்றும் திறனை அதிகரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக கால்வாயில் 10 அடி வரையில் பொதுப்பணித்துறை இடமாகும். அதில் 3 அடி கால்வாய் வழியாக நீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் கால்வாய் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை அகற்றுவதற்கு ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது, உடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...