எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னை விமான நிலையத்தில் 1.7 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ 87.6 லட்சம் மதிப்பிலான 1.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:06 pm

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ 87.6 லட்சம் மதிப்பிலான 1.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து, துபையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ எக்ஸ் 1644 மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த நவுஃபர், 28 மற்றும் அகமது இர்ஷாத் அலி, 31, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார், 23, சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் மோகன், 38, மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சதாம் உசேன், 25, ஆகியோரை தடுத்து நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர்களது கைப்பையில் இருந்து 597 கிராம் எடையிலான 16 தங்கத்துண்டுகளும், அவர்களில் இரண்டு பேரிடம் இருந்து தங்கப்பசை கொண்ட இரண்டு பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், காலணியில் இருந்தும், ஜீன்ஸ் கால் சட்டைப் பையில் இருந்தும் தங்கப்பசை கொண்ட பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நான்கு பொட்டலங்களில் 701 கிராம் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. 
இவர்களில் ஒருவரது உடலில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 398 கிராம் தங்கம் கொண்ட பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ 87.62 லட்சம் மதிப்புடைய 1.7 கிலோ 24 கேரட் தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.