எடப்பாடியில் தோ்தல் பிரசாரத்தை தொடங்குகிறாா் முதல்வா் கே.பழனிசாமி

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் சனிக்கிழமை தொடங்குகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதி சென்றாய பெருமாள் கோவிலில் இருந்து தேர்தல் பிரசாரத்தை  துவக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரசார வாகனம்.
முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதி சென்றாய பெருமாள் கோவிலில் இருந்து தேர்தல் பிரசாரத்தை துவக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரசார வாகனம்.
Updated on
2 min read

சேலம்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் சனிக்கிழமை தொடங்குகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

சேலம் புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முக்கிய நிா்வாகிகள், சட்டப் பேரவை உறுப்பினா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். 

இதனைத்தொடர்ந்து முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரிய சோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் ஆலயத்தில் சனிக்கிழமை பூஜை செய்து விட்டு முதல்கட்டமாக எனது சொந்தத் தொகுதியில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதி சென்றாய பெருமாள் கோவிலில் இருந்து தேர்தல் பிரசாரத்தை  துவக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரசார வாகனம்.

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 6 முறை அதிகமுக வெற்றி பெற்றுள்ளது. அதில் 4 முறை முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். 2016 பேரவைத் தேர்தலில் முதல்வர் பழனிசாமி சுமார் 99 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் எடப்பாடி தொகு அதிமுகவின் கோட்டையாக பேசப்படுகிறது.

ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரவணன் தோல்வியை சந்தித்தார். முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடியிலும், சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் அதிகம்.

பெருமாள் கோவிலில் இருந்து தேர்தல் பிரசாரத்தை  துவங்க உள்ள முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க காத்திருக்கும் பெண்கள்.

இதனால் வரும் பேரவைத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்போடு முதல்வர் வேட்பாளரான முதல்முறையாக சந்திக்கும் தேர்தல் என்பதால் சனிக்கிழை தனது சொந்தத் தொகுதியில் தீவிர பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com