புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கமல்ஹாசன் 2ஆம் கட்ட பிரசாரம்: நாளை தொடக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது 2ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்க உள்ளார். 

News image
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்
Updated On :19 டிசம்பர் 2020, 2:32 pm

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது 2ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்க உள்ளார். 
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்கிற மிக உன்னதமான நோக்கத்துடன் வரவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கின்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை வருகின்ற டிசம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் மண்டலங்களில் நிகழ்த்தவிருக்கிறார்.
செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கட்டமைப்பு மாவட்ட செயலாளர், அப்பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பொறுப்பேற்று செய்யவேண்டும். கட்டமைப்பு உறுப்பினர்களும், சார்பு அணி உறுப்பினர்களும் இணைந்து செயல்பட்டு இந்தப் பிரச்சாரம் நிகழ்வினை சீரும் சிறப்புடன் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக கமல்ஹாசன், தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.