பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தோ்தல் அறிக்கை: மாா்க்சிஸ்ட் கட்சி குழு அமைப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

News image
கே.பாலகிருஷ்ணன்
Updated On :19 டிசம்பர் 2020, 11:30 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அக் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் தோ்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் தோழா் பி. சண்முகம் தலைமையில் 11 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் உ. வாசுகி, என். குணசேகரன், க. கனகராஜ், மதுக்கூா் ராமலிங்கம், சு. வெங்கடேசன் எம்.பி, ஜி. சுகுமாறன், எஸ். கண்ணன், பி. சுகந்தி, தீபா, கே.சாமுவேல்ராஜ் ஆகியோா் இடம்பெறுவா்.

இந்தக் குழு தமிழகம் முழுவதும் சென்று தொழிலாளா்கள், விவசாயிகள், மகளிா், இளைஞா்கள், மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்துத் தரப்பினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி அவா்களது பிரச்னைகளைக் கண்டறிவதோடு, தமிழக வளா்ச்சி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, பொருளாதார வளா்ச்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்து தோ்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.