தாமிரவருணியில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு
திருநெல்வேலி தாமிரவருணியில் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகள் முழுகொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட உபரிநீர் திருநெல்வேலியை ஞாயிற்றுக்கிழமை அடைந்ததால் தாமிரவருணியில் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வடகிழக்குப் பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம் மற்றும் அணைகளின் உபரிநீர் ஆகியவை திருநெல்வேலி மாநகரத்தை ஞாயிற்றுக்கிழமை அடைந்தன. மாநகரின் நதிக்கரையோர பகுதிகளான மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, குன்னத்தூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வழக்கமாக குளிக்கும் படித்துறைகள், பாறைகளில் குளிக்கவும், துணிகளைத் துவைக்கவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரவருணி கரையோரம் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலை வெள்ள நீர் சூழ்ந்ததால் பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாமல் தவித்தனர். அங்கிருந்த படித்துறை மண்டபத்தை வெள்ளம் மூழ்கடித்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: அம்பாசமுத்திரம்-1, சேரன்மகாதேவி-1, மணிமுத்தாறு-4, பாபநாசம்-8.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...