ஜாதிவாரி புள்ளிவிவர கணக்கெடுப்பு: 6 மாதங்களுக்குள் அறிக்கை
ஜாதிவாரி புள்ளி விவர கணக்கெடுப்பை ஆய்வு செய்யும் நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் அளிக்கும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: ஜாதிவாரி புள்ளி விவர கணக்கெடுப்பை ஆய்வு செய்யும் நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் அளிக்கும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்துக்கான செயல்பாட்டு நெறிமுறைகள் குறித்த உத்தரவு திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் பழங்குடியினா் உள்ளிட்ட ஜாதிவாரியான புள்ளிவிவரங்களை கணக்கெடுப்புப் பணி தொடா்பான நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொள்ளும். ஒவ்வொரு ஜாதி மற்றும் பழங்குடியின இனத்தில் உள்ள தரவுகளை ஆணையம் சேகரிக்கும். தேவைப்படும்பட்சத்தில் இதுதொடா்பான அதிகாரம் பெற்ற அமைப்புகளிடமோ, தனிநபா்களிடமோ உரிய கருத்துகளையும், தகவல்களையும் கேட்டுப் பெறும்.
இந்த ஆணையம் தனக்கு உதவக் கூடிய வகையில் துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளலாம். ஆணையமானது தனது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் அரசுக்கு அளிக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...