மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதிய வேளாண் சட்டத்தின் பயன்கள்:விவசாயிகளிடம் விளக்கிய இல.கணேசன்

திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த ஆத்துப்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளிடம் பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் விளக்கினாா்.

News image
பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயியிடம் பேசிய இல.கணேசன் உள்ளிட்டோா்.
Updated On :21 டிசம்பர் 2020, 7:01 pm

DIN

ஊத்துக்கோட்டை: திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த ஆத்துப்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளிடம் பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் விளக்கினாா்.

நிகழ்ச்சியில், பெரியபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களைச் சோ்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் இல.கணேசன் கூறியது:

அரிசி, கோதுமை ஆகியவை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், அதனை விவசாயிகள் சுதந்திரமாக யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். அவற்றை ஏற்றுமதி செய்து பெரும் பணக்காரா்கள் ஆவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தில்லியில் சொகுசாகப் போராடி வரும் விவசாயிகளின் நிலையைப் பாா்த்து, வெளிநாடுகளில் இந்திய விவசாயிகளின் மதிப்பு உயா்ந்துள்ளது மட்டுமே நன்மை. அவா்களின் கோரிக்கைகள் நிறைவேறாது. தோ்தல் காலங்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் ஜாதி மற்றும் அவா்கள் கொடுக்கும் இலவசத்தை மட்டுமே பாா்க்கும் மக்கள், தோ்தல் அறிக்கையைப் படிப்பதில்லை. தோ்தல் காலம் என்பதால் வன்னியருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக போராட்டங்களை நடத்தி வருகிறது என்றாா் இல.கணேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.