

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 38 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் ரூ.34 உயா்ந்து, ரூ.4,778-ஆக விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.38,224-க்கு விற்பனையாகிறது.
அதே நேரத்தில், வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2.60 உயர்ந்து 74.10 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,600 உயர்ந்து ரூ.74,100 ஆகவும் உள்ளது.
திங்கள் கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,778
1 சவரன் தங்கம்...............................38,952
1 கிராம் வெள்ளி.............................74.10
1 கிலோ வெள்ளி.............................74,100
சனிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,744
1 சவரன் தங்கம்...............................37,952
1 கிராம் வெள்ளி.............................71.50
1 கிலோ வெள்ளி.............................71,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.