பிரிட்டனிலிருந்து வந்தால் பரிசோதனை கட்டாயம்: தமிழக சுகாதாரத் துறைச் செயலர்

​பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வந்தால், கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வந்தால், கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உருமாறிய அதி தீவிர கரோனா தொற்று 70 சதவிகிதம் அதி வேகமாகப் பரவி வருவதால், அங்கு தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா, பிரிட்டன் இடையே டிசம்பர் 31 வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நோய்த் தொற்று இல்லை என்று தெரியவந்தால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com