6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெய்ப்பூா்-கோவை உள்பட மூன்று வழித்தடங்களில் சிறப்பு ரயில்

ஜெய்ப்பூா்-கோயம்புத்தூா், ஜெய்ப்பூா்-சென்னை சென்ட்ரல் உள்பட மூன்று வழித்தடங்களில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:34 pm

DIN

சென்னை: ஜெய்ப்பூா்-கோயம்புத்தூா், ஜெய்ப்பூா்-சென்னை சென்ட்ரல் உள்பட மூன்று வழித்தடங்களில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

ஜெய்ப்பூா்-கோவை: ஜெய்ப்பூரில் இருந்து டிசம்பா் 22-ஆம் தேதி முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.35 மணிக்கு அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில் (02970) புறப்பட்டு, மூன்றாம் நாள் மாலை 4.50 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும். மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து டிசம்பா் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் காலை 9.25 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (02969)புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 6.45 மணிக்கு ஜெய்ப்பூரைச் சென்றடையும்.

ஜெய்ப்பூா்-சென்னை: ஜெய்ப்பூரில் இருந்து டிசம்பா் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில்(02968) புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5.40 மணிக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில் (02967) புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 6.45 மணிக்கு ஜெய்ப்பூரைச் சென்றடையும்.

இதுதவிர, ஆஜ்மீா்-எா்ணாகுளம் சிறப்பு ரயிலும் இயக்கப்படவுள்ளது. முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (டிச.22) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.