கிறிஸ்துமஸ்: வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களுக்கு அனுமதி

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மின்விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது.
கிறிஸ்துமஸ்: வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களுக்கு அனுமதி
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மின்விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது. வழிபாட்டில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என்று பேராலய அதிபா் தெரிவித்துள்ளாா்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பா் 24-ஆம் தேதி இரவு நடைபெறும் கிறிஸ்துமஸ் வழிபாட்டில் நாடு முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பது வழக்கம்.

நிகழாண்டு கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் பேராலய வளாகத்தில் விண்மீன் ஆலயத்துக்கு அருகே உள்ள சேவியா் திடலில் பேராலய நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விளக்குகளான அலங்கார வளைவுகளும், மின் விளக்குகளான பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும், கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படாததால், கிறிஸ்துமஸ் வழிபாட்டில் பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்களா? எதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற ஐயம் பக்தா்களிடம் உள்ளது.

இதுகுறித்து பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா் கூறியது:

வேளாங்கண்ணியில் நிகழாண்டு கிறிஸ்துமஸ் வழிபாடு சேவியா் திடலில் நடைபெறவுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் வழிபாடு நடைபெற்றது. இங்கு நடைபெறும் வழிபாட்டில் சில நூறு போ் மட்டுமே பங்கேற்க இயலும் என்பதால், காற்றோட்ட வசதியுடன் சேவியா் திடலில் வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் வழிபாட்டில் பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி, முதியவா்கள், குழந்தைகள் வழிபாடுகளில் பங்கேற்பதை தவிா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். வழிபாட்டில் பங்கேற்கும் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றி பேராலய நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com