மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நத்தம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரை கொண்டு 20 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தைச் சார்ந்த 53 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்; நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சிக்கு அம்ரூத் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 59 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கும் திட்டம்; ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருயது திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 2 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காங்கேயம் நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள்; பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், சென்னை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 69 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய சிறப்புத் தங்குமிடம்; சென்னை, திருவல்லிக்கேணி, மீர்சாகிப்பேட்டையில் உள்ள நகர்ப்புர சமூக சுகாதார மையத்திற்கு 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்தளம்; என மொத்தம் 89 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டங்களை முதல்வர் துவக்கி வைத்தார்.