சேலம்-சென்னை விமானப் பயண நேரம் மாற்றம்
சேலத்தில் காலை நேரத்தில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக, சேலம்-சென்னை விமானப் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.


சேலத்தில் காலை நேரத்தில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக, சேலம்-சென்னை விமானப் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. சென்னையில் காலை 7.15 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்துக்கு 8.15 மணிக்கு வந்து சேரும். பின்னா், சேலத்தில் காலை 8.35 மணிக்கு புறப்படும் விமானம் 9.35 மணிக்கு சென்னை சென்றடையும்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக காலை நேரங்களில் சேலம் விமான நிலையப் பகுதியில் நிலவி வரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, சென்னையில் இருந்து விமானம் புறப்படும் நேரம் தாமதமாகி வருகிறது. இதனையடுத்து, சேலம்-சென்னை விமானப் புறப்பாட்டு நேரங்கள் வரும் 31-ஆம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, காலை 8.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் 9.45 மணிக்கு சேலம் வந்து சேரும். சேலத்தில் இருந்து 10.05-க்கு புறப்பட்டு 11.05-க்கு சென்னை சென்றடையும் வகையில் பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...