தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்: கே.என்.நேரு

அடுத்த நான்கு மாதங்கள் காத்திருந்தால் அடுத்து திமுக ஆட்சி வந்தவுடன் மக்களுக்கான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு தெரிவித்தார்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 9:24 am

DIN

அடுத்த நான்கு மாதங்கள் காத்திருந்தால் அடுத்து திமுக ஆட்சி வந்தவுடன் மக்களுக்கான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில், திருச்சி, மண்ணச்சநல்லூர், லால்குடி பேரவை தொகுதிகளில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சியை நிராகரிப்போம் என்ற கூக்குரலுடன் நடைபெற்ற இந்த கிராம சபைக் கூட்டங்களின் ஒரு பகுதியாக, உறையூர் குறத் தெருவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று கே.என். நேரு பேசியது:

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. 4 மாதங்கள் மட்டும் காத்திருங்கள். அடுத்து திமுக ஆட்சி வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும். சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, மதுரை என்ற நிலையை மாற்றி திருச்சியை முன்னிலைப்படுத்துவோம். 

கருணாநிதி அளித்த ஆட்சியை வழங்க திமுக-வும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் உள்ளனர். அதனால்தான், எம்ஜிஆர் ஆட்சியை வழங்குவதாக சிலர் கூறுகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வேறு யாரு பெயரை கூறினாலும் வாக்குகள் பெற முடியாது என்பதற்காக எம்ஜிஆர் பெயரைக் குறிப்பிடுகிறார். அதிமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளதால், திமுக-வினர் ஊழல் செய்ததாகக் கூறுகின்றனர். 

10 ஆண்டுகளாக திமுக ஆட்சியிலேயே இல்லை. நீதிமன்றத்தில் எங்கள் மீது தொடர்ந்து வழக்குகளையும் சட்டப்படி சந்தித்து விடுதலை பெற்றுள்ளோம். அதிமுக ஆட்சியில்தான் 10 ஆண்டுகளாக ஒரே துறையில் அமைச்சர்கள் நீடித்து பல்வேறு ஊழல்களைச் செய்துள்ளனர். நீதிமன்றம் செல்வதற்கு முன்பாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.