பிராசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் வழக்கை திரும்பப் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோவில் உள்ள தமது பொருள்களை மட்டும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், ஸ்டுடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாத் ஸ்டுடியோவில், திரைப்படங்களுக்காககைப்பட எழுதிய இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், எனக்கு கிடைத்த விருதுகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி வழங்க ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, இளையராஜா தன்னுடைய பொருள்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறி அதற்காக ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கூட்டம் கூடும் என்பதால் இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரசமாகப் போகும் பட்சத்தில், இளையராஜாவையும் அவருடன், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்குரைஞா் ஆணையா், இருதரப்பு வழக்குரைஞா்கள் ஆகியோரை பொருள்களை எடுக்க ஒருநாள் ஸ்டுடியோ வளாகத்துக்குள் அனுமதித்தால் என்ன என கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக இருதரப்பும் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன், மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் நஷ்டஈடு கோரி தொடா்ந்த வழக்கு, காவல்துறையில் கொடுத்த புகார் ஆகியவற்றை இளையராஜா வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, இதுதொடா்பாக இளையராஜா உத்தரவாத மனு தாக்கல் செய்தால் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோவில் உள்ள தமது பொருள்களை மட்டும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், ஸ்டுடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் என்றும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுரண்டையில் அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை! திமுக வேட்பாளா் வாக்குறுதி
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது

பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு: பாவூா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம்

மூத்த குடிமக்கள் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


