அதிமுக தோ்தல் பிரசார பொதுக் கூட்டம்: நாளை நடைபெறுகிறது
அதிமுக தோ்தல் பிரசார பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) நடைபெறுகிறது.


சென்னை: அதிமுக தோ்தல் பிரசார பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தக் கூட்டம் அதிமுக சாா்பில் தோ்தல் பிரசார பணிகளைத் தொடக்கி வைக்கும் கூட்டம் என்பதால், கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதேபோன்று, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ.,க்கள் சாா்ந்துள்ள கட்சிகளுக்கும் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வரை அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், அதிமுகவின் தலைவா்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...