தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரஜினி விரைந்து குணமடைய வாழ்த்துக்கள்: இரா.முத்தரசன்

ரஜினி விரைந்து குணமடைய வாழ்த்துக்கள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 4:12 pm

DIN

ரஜினி விரைந்து குணமடைய வாழ்த்துக்கள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ரஜினி விரைந்து குணமடைய வாழ்த்துக்கள் திரையுலகின் “சூப்பர் ஸ்டார்” திரு.ரஜினிகாந்த் படப்பிடிப்புத்தாக சென்றிருந்த இடத்தில் உடல் நலம் பாதித்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 
ரஜினிகாந்த் திரையுலகின் மூத்த கலைஞர். இவரது பல்சுவை  நடிப்பில் பல்லாயிரம் தமிழ் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். 
திரை வானில் ஜொலிக்கும் துருவ நட்சத்திரமாக இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு தொடர வேண்டும் என பெரு விருப்பத்தை அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். படப்பிடிப்பு குழுவினர் சிலர் கொவைட் 19 நோய்த்தொற்று தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் வேதனையளிக்கிறது. எனினும் மருத்துவ பரிசோதனையில் ரஜினிக்கு கொவைட் 19 தொற்று இல்லை என்பது திருப்தியளிக்கிறது. 
ஆனாலும், ரத்த அழுத்தம் சீராக அமையவில்லை என்பதால் சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர் ரஜினியும், அவரது படப்பிடிப்புக் குழுவினரும் விரைந்து பரிபூரண குணமடைந்து இயல்பான பணிகளுக்கு திரும்ப வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.