பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கரோனா: சுகாதாரத்துறை

பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை மொத்தம் 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)
Updated on
1 min read

பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை மொத்தம் 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே பிரிட்டனிலிருந்து வந்த சென்னையை சேர்ந்தவருக்கு கரோனா உறுதியான நிலையில், தற்போது மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக சென்னை, மதுரையை சேர்ந்த தலா ஒருவருக்கும், தஞ்சையை சேர்ந்த இரண்டு பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா கண்டறியப்பட்ட 5 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனையில் 'நெகடிவ்' என வந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com