

வேலூர்: கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிப்பதால் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் கூறினார்.
காட்பாடியில் திமுக பொதுச்செயலர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது: கிராமசபை கூட்டம் என்ற பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டமும் அதிகாரமும் இல்லை.
கடந்த இரண்டு தினங்களாக திமுக நடத்திய கிராமசபை கூட்டங்களுக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததைக் கண்டு அதிமுகவிற்கு ஆபத்து ஏற்படும் என்று கூட்டத்திற்கு தடை போட்டுள்ளனர். தடையால் எங்கள் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது.
கிராமசபை கூட்டம் என்ற பெயரை மாற்றி மக்கள்சபை கூட்டம் என்று நடத்துவோம் என்று துரைமுருகன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.