டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதல்: தந்தை, மகள் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் தந்தை, மகள் பலியாகியுள்ளனர்.

News image
ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதல்
Updated On :27 ஜனவரி 2024, 6:12 pm

DIN

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் தந்தை, மகள் பலியாகியுள்ளனர். மகன் படுகாயமடைந்தாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Story image

ராஜபாளையம் அருகே செந்தட்டியாபுரம் தைச் சேர்ந்தவர் கணபதி (36) இவர் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகன் கமலேஷ்(9) மகள் சுசிகா(7)ஆகிய இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்த பின்பு தனது இருசக்கர வாகனத்தில் செந்தட்டியாபுரம் நோக்கி சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

Story image

அப்போது ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேலத்திற்குச் சென்ற அரசுப் பேருந்து எதிரே மோதியதில் சம்பவ இடத்திலேயே கணபதி மற்றும் அவரது மகள் சுசிகா  இரண்டு பேரும் உயிரிழந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தந்தை-மகள் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Story image

பின்னர் மகன் கமலேஷை  மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன்(36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.