விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அண்ணன் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சீர்காழியை அடுத்த திருவெள்ளக்குளம் எனும் அண்ணன் கோயில் கிராமத்தில் அண்ணன் பெருமாள் அருள்பாலிக்கிறார். 

News image
அண்ணன் பெருமாள்
Updated On :25 டிசம்பர் 2020, 9:44 am

DIN

சீர்காழி:  சீர்காழியை அடுத்த திருவெள்ளக்குளம் எனும் அண்ணன் கோயில் கிராமத்தில் அண்ணன் பெருமாள் அருள்பாலிக்கிறார். 

108 திவ்ய தேசங்களில்  28-வது ஸ்தலமான  இங்கு மூலவர் அண்ணன் பெருமாள் ,உற்சவர் சீனிவாச பெருமாள் காட்சி தருகிறார். திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று போற்றப்படும் அண்ணன் பெருமாள் கோவில் என வரலாறு கூறுகிறது. குமுதவல்லி நாச்சியாரின் அவதார ஸ்தலமான இங்கு சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது.

Story image

முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்று நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு பிரதான வாயிலான சொர்க்க வாசலுக்கு எழுந்தருளினார். 

Story image

பின்னர் அங்கு சிறப்பு வழிபாடு , தீபாராதனை காட்டப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.