ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் .
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் .


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் திறந்த போது பக்தர்கள் கோவிந்தா கோபாலா என விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர்

வைகுண்ட ஏகாதசி தினமான இன்று வெள்ளிக்கிழமை சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக பெரியபெருமாள் முதலில் வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து ஆண்டாள் ரங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக வந்தனர்.

முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய பெருமாளையும் ஆழ்வார்கள் எதிர்கொண்டு அழைத்தனர்.

அதிகாலை ஐந்தரை மணிக்கு நடைபெற்ற இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர், உள்பட ஏராளமானோர் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாள் ரங்க மன்னாரை தரிசனம் செய்தனர்

சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சொர்க்கவாசல் திறந்த பின்புபெரிய பெருமாள் சுவாமி முன்பாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் சந்திரபிரபா எம்எல்ஏ தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com