தங்கம் விலை ஒரு சவரன் ரூ.37,840-க்கு விற்பனை

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு 
தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு 
Updated on
1 min read

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.3 உயா்ந்து, ரூ.4,730 ஆக உள்ளது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம்  ரூ.71.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.71,200 ஆகவும் விற்கப்படுகிறது. 

சனிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................. 4,730

1 சவரன் தங்கம்...............................37,840

1 கிராம் வெள்ளி.............................71.20

1 கிலோ வெள்ளி.............................71,200

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................. 4,727

1 பவுன் தங்கம்...............................37,816

1 கிராம் வெள்ளி.............................71.20

1 கிலோ வெள்ளி.............................71,200

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com