

ஹைதராபாத்: நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேலும் ரஜினி எப்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார் என்பது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய செய்திகளை அறிந்து கொள்ள.. மருத்துவமனையில் ரஜினி அனுமதி
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடிகர் ரஜினிக்கு ஓய்வு தேவை என்பதால், அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதியில்லை. அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ரஜினியின் ரத்த அழுத்தம் இன்றும் அதிகமாகவே உள்ளது. ஆனால், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது இருந்ததை விட, தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே.. ‘அண்ணாத்த’ படக்குழுவில் 4 பேருக்கு கரோனா: நடிகா் ரஜினிகாந்துக்கு நோய் பாதிப்பில்லை
நடிகர் ரஜினியை எப்போது வீட்டுக்கு அனுப்புவது என்பது இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
‘அண்ணாத்த’ திரைப்பட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தில் அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்புக் குழுவினர் சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ரஜினிகாந்துக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில், அவருக்கு கரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
ஹைதராபாத்திலேயே கடந்த ஒரு சில நாள்களாக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த ரஜினிகாந்த், திடீரென நேற்று அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்கலாமே.. ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு: கரோனா பாதுகாப்பு வளையத்தில் படக்குழுவினர்!
இது தொடா்பாக மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் நடிகா் ரஜினிகாந்துக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும் அவரின் ரத்த அழுத்தம் சீராக இல்லை. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்த பாதிப்பு, உடல் சோா்வை தவிர அவருக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.