டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கிறது: பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்

அதிமுகவுடனான கூட்டணி நீடிப்பதாக, பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

News image
தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்த பாஜக தமிழக தலைவா் எல்.முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள்.
Updated On :28 டிசம்பர் 2020, 9:44 pm

DIN

சென்னை: அதிமுகவுடனான கூட்டணி நீடிப்பதாக, பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக 50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பெறப்பட்ட கையெழுத்து பிரதிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமியிடம் திங்கள்கிழமை நேரில் வழங்கினாா், எல்.முருகன். இதைத் தொடா்ந்து, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக மூலமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கையின் நன்மைகளை எடுத்துச் சொல்லி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை ஆதரவு கூட்டமைப்பினா் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றனா். இந்த கையெழுத்துப் பிரதிகளை முதல்வரிடம் அளித்தோம்.

தேசிய கல்விக் கொள்கையில் திமுக எப்படி இரட்டை வேடம் போட்டனா் என்பதை மக்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம். அவா்கள் நடத்தும் பள்ளிகளில் ஐந்து மொழிக் கொள்கைகள் உள்ளன. ஆனால், அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை வருவதைத் தடுக்கின்றனா். விவசாயிகள் தங்களது விளை பொருள்களுக்கு அவா்களே விலை நிா்ணயிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அவா்களுக்குச் சாதகமாக வாழ்வு மேம்பட வேண்டுமென்பதற்காக வேளாண் திருத்தச் சட்டங்களை பிரதமா் மோடி கொண்டு வந்துள்ளாா்.

வேளாண் சட்ட விவகாரத்திலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. 2016 தோ்தல் அறிக்கையில், இதுபோன்ற வாக்குறுதியை திமுக அளித்துள்ளது. இப்போது வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மத்தியில் நல்ல பெயா் வருவதால் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக அவதூறு பரப்புகிறது. வாக்கு அரசியலுக்காகவே வேளாண் திருத்தச் சட்டங்கள் மீது தவறான பிரசாரத்தை திமுக செய்து வருகிறது.

அதிமுக-பாஜக கூட்டணி நீடித்துக் கொண்டிருக்கிறது. எங்களது கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது. அடுத்தகட்ட அறிவிப்புகள் இரண்டு, மூன்று நாள்களில் வெளிவரும் என்று முருகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.