சென்னை: தமாகா தலைவா் ஜி.கே.வாசனின் பிறந்த நாளையொட்டி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறினா்.
ஜி.கே.வாசன் தனது 56-ஆவது பிறந்த நாளை திங்கள்கிழமை கொண்டாடினா். தில்லியில் அவா் இருந்த நிலையில், அவரது தொண்டா்கள் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினா். கோயில்களிலும் அவா் பெயரில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.
ஜி.கே.வாசனுக்கு அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் குமரி அனந்தன், சு.திருநாவுக்கரசா் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.