மீண்டும் 38 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
மீண்டும் 38 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்
மீண்டும் 38 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்
Updated on
1 min read


சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ.28 உயா்ந்து, ரூ.4,758 ஆக உள்ளது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சிறிது உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2.20 உயர்ந்து ரூ.73.40 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.73,400 ஆகவும் விற்பனையாகிறது. 

திங்கள்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................. 4,758

1 சவரன் தங்கம்...............................38,064

1 கிராம் வெள்ளி.............................73.40

1 கிலோ வெள்ளி.............................71,400

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,730

1 சவரன் தங்கம்...............................37,840

1 கிராம் வெள்ளி.............................71.20

1 கிலோ வெள்ளி.............................71,200

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com