மாரம்பட்டி கிராமத்தில் மயான பாதை கோரி சடலத்துடன் சாலை மறியல்
ஊத்தங்கரை அடுத்த மரம்பட்டி கிராமத்தில் சுடுகாட்டு பகுதிக்கு சாலை அமைத்து தரக் கோரி திங்கள் கிழமை சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பகுதி பொதுமக்கள்.


ஊத்தங்கரை அடுத்த மரம்பட்டி கிராமத்தில் சுடுகாட்டு பகுதிக்கு சாலை அமைத்து தரக் கோரி திங்கள் கிழமை சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பகுதி பொதுமக்கள்.
மாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி கவுன்டர் (87) இவர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி சடலத்தைச் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை வட்டாட்சியர் தண்டபாணி காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை செய்து மயான பாதை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் பகுதி மக்கள் சடலத்தைக் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...