தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு மிதமான மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழக கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை(டிச.28) ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையும் நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
டிசம்பா் 29, 30: இதைத் தொடா்ந்து தென் தமிழக கடற்கரை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். வடக்கு உள் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
டிசம்பா் 31-ஆம் தேதி: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...