திண்டுக்கல் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்

திண்டுக்கல்லில்  உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 
திண்டுக்கல் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்


திண்டுக்கல்லில்  உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று, முயலகன் என்ற அசுரனின் ஆணவத்தை அழித்து பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு, சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடி ஆருத்ரா தரிசனம் அளித்தார் என்பது ஐதீகம். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், மார்கழி திருவாதிரை நாளில் தமிழகம் முழுவதுமுள்ள சிவாலயங்களில் சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் ஆருத்ரா தரிசன வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானுக்கு 21 திருவெம்பாவை பாடல்களால் பாராயணம் செய்து, சிறப்பு தீபாராதணை நடைபெற்றது.

 சிவாச்சாரியார் கைலாசம் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளுக்கு பின், பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது.

 இதேபோல், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலிலும் நடராஜப் பெருமான் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் திருக்கோவிலிலும் ஆருத்ரா தரிசன வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com