தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவள்ளூரில் கார் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது!

திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் கார் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :9 பிப்ரவரி 2020, 11:14 am

DIN

திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் கார் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தருவதாகக் கூறி, மர்ம நபர்கள் சிலர் கார் திருட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் திருடுபோன கார்களை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை துணைக் கண்காணிப்பாளர் சந்திரகாசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கார் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 19 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிலரை கைது செய்ய இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளார். 

கார் திருட்டில் முக்கியக் குற்றவாளியான ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த பிரவீன் ஜார்ஜ், அவருக்கு உடந்தையாக இருந்த பரத் மற்றும் வெங்கடேஷ் ஆகிய மூவரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.