இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தலைமைச் செயலாளருடன் தமிழக டிஜிபி திரிபாதி ஆலோசனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலாளருடன் தமிழக டிஜிபி திரிபாதி திடீர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

News image
Updated On :16 பிப்ரவரி 2020, 5:56 am

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலாளருடன் தமிழக டிஜிபி திரிபாதி திடீர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் தமிழக டிஜிபி திரிபாதி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.