ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது: தில்லி வன்முறை குறித்து ஸ்டாலின் கருத்து
தில்லி வன்முறை அபாயத்துக்குரிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தில்லி வன்முறை அபாயத்துக்குரிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் சுட்டுரைப் பதிவில் குறிப்பிடுகையில்,
"மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது கொடூரமானத் தாக்குதல் என தில்லி வன்முறை அபாயத்துக்குரிய கட்டத்தை எட்டியுள்ளது. தில்லி காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய அரசு, வன்முறையில் ஈடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இயல்பு நிலையைக் கொண்டுவர விரைந்து செயல்பட வேண்டும். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது" என்றார்.
வடகிழக்கு தில்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவானவர்கள் மற்றும் எதிரானவர்கள் இடையிலான மோதல் வன்முறையில் முடிந்தது. இதன்காரணமாக, வடகிழக்கு தில்லி பகுதியில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இந்த வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...