தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்
புது தில்லி: தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பாக சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன் மற்றும் செல்வராஜா ஆகிய நால்வரும், திமுகவில் இருந்து திருச்சி சிவா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக டி.கே.ரங்கராஜன் என மொத்தம் ஆறு பேர் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகித்து வருகிறார்கள். இவர்களது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
இந்நிலையில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மார்ச் 26-ஆம் தேதி இந்த ஆறு இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...