மேட்டூர் அருகே பணிச்சுமை மற்றும் மன உளைச்சலால் தொழிலாளி கிணற்றில் விழுந்து சாவு

மேட்டூர் அருகே பணிச்சுமை மற்றும் மன உளைச்சலால் தொழிலாளி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 
மேட்டூர் அருகே பணிச்சுமை மற்றும் மன உளைச்சலால் தொழிலாளி கிணற்றில் விழுந்து சாவு

மேட்டூர் அருகே பணிச்சுமை மற்றும் மன உளைச்சலால் தொழிலாளி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 

மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரத்தில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த ஆலையில் ஜலகண்டபுரத்தில் சேர்ந்த கந்தசாமி மகன் வெங்கடேஷ் வயது 48 என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தொழிலாளர் நலத்துறையில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் வெங்கடேஷுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

தீர்ப்பில் வெங்கடேசனுக்கு நிவாரணமாக ரூபாய் ஒன்பது லட்சமும், பணியும் வழங்க உத்தரவிடப்பட்டது. வெங்கடேசன் கடந்த ஆறு மாதங்களாக நூற்பாலையில் மீண்டும் பணியில் சேர்ந்தார். இவரை வழக்கமாக பணிசெய்யும் பிரிவிற்கு பதிலாக வேறு பிரிவு பணியமர்த்தப்பட்டார். இவரை இரண்டு மேற்பார்வையாளர்கள் கண்காணித்து வந்தனர். இதனால் கூடுதல் பணிச்சுமைக்கு மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் நேற்று இரவு பணிக்கு நூற்பாலைகள் வந்தார். திடீரென நூற்பாலை வளாகத்திலுள்ள கிணற்றில் குதித்து இறந்து போனார். 

இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவி தொழிலாளர்களும் பொதுமக்கள் கூடினார்கள் அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்காமல் சடலத்தை கிணற்றிலிருந்து எடுக்கக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதுதானா ஜலகண்டபுரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்படிக்கை காரணமாக சடலம் மீட்கப்பட்ட சேலம் அரசு மருத்துவமனைக்குபிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com