200 நாட்களாக 100 அடியில்: புதிய சாதனை படைத்த மேட்டூர் அணை நீர்மட்டம்
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு புதிய சாதனையைப் படைத்து வருகிறது.


சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு புதிய சாதனையைப் படைத்து வருகிறது.
அதாவது, தொடர்ந்து 200 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேலாகவே உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இதற்கு முன்பு 2011ம் ஆண்டு தான் 200 நாட்களாக 100 அடியில் நீடித்தது. அதன் பிறகு 9 ஆண்டுகள் கழித்து 2019 - 2020ல் இன்று வரை தொடர்ந்து 100 அடிக்கு மேலாகவே நீர்மட்டம் உள்ளது.
மேட்டூா் அணையின் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 105.32அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு நீா்வரத்தானது 102 கன அடியாகவும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா்வெளியேற்றம் 750 கன அடியாகவும் உள்ளது. அணையில் தற்போது நீ இருப்பு 71.90 டி.எம்.சி.யாக உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அந்த ஆண்டில் முதல் முறையாக மேட்டூர் அணை நீர் மட்டம் 101 அடியாக உயர்ந்தது. அதற்கு முந்தைய நாள் அதாவது ஆகஸ்ட் 12ம் தேதி 82 அடியாக இருந்த நீர் மட்டம், கர்நாடகாவில் பெய்த கன மழை காரணமாக, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக ஒரே நாளில் அணை நீர் மட்டம் கிட்டத்தட்ட 20 அடிகள் வரை உயர்ந்தது. அது மட்டுமல்ல, 13ம் தேதி மாலையே நீர் மட்டம் 106 அடியாக உயர்ந்து தமிழக மக்களின் மனங்களில் மகிழ்ச்சியைப் பரப்பியது.

அன்றைய தினம் காவிரியில் இருந்து அணைக்கு வரும் நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக இருந்தது. காவிரி நதி அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்கும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அன்றைய தினம் காவிரி நீரால் மூழ்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 13ம் தேதி முதல் தொடர்ந்து 200வது நாளாக இன்று வரை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேலாகவே நீடிக்கிறது.
1925ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1934ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமானச் செலவு மட்டும் ரூ.4.80 கோடியாகும். ஒட்டுமொத்தமாக 5,300 அடி நீளமுள்ள மேட்டூர் அணையில் 93.50 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும். அணையின் அதிகபட்ச நீர் சேமிப்பு உயரம் 120 அடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...