எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழகத்தில் காவலன் செயலி பதிவிறக்கம் 10 லட்சத்தைத் தொட்டது

பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செல்லிடப்பேசி செயலியை இதுவரை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

News image
Updated On :1 ஜனவரி 2020, 5:32 am

DIN


சென்னை: பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செல்லிடப்பேசி செயலியை இதுவரை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, தமிழகக் காவல்துறை காவலன் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.

தற்போதுவரை 9.4 லட்சம் ஆன்டிராய்ட் செல்போன் பயனாளர்களும், 60 ஆயிரம் ஐஃபோன் பயனாளர்களும் காவலன் செயலியை அறிமுகம் செய்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Story image

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இதுவரை 1.60 லட்சம் பயனாளர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அடுத்ததாக  கோவையில் 45 பயனாளர்களும், காஞ்சிபுரத்தில் 40 ஆயிரம் பயனாளர்களும், திருவள்ளூரில் 35 ஆயிரம் பயனாளர்களும் காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

காவலன் செயலியைப் பயன்படுத்துவதில் இருக்கும் சிரமங்கள் குறித்து வந்த புகாரினைத் தொடர்ந்து, அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. செயலியில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுவிட்டது. மேலும் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்ய வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது என்று மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.